தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகள், அசாமில் உள்ள 1 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணை வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 5:53PM by PIB Chennai

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகள், அசாமில் உள்ள 1 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல்களை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

சுதந்திரமான, நியாயமான, நம்பகமான தேர்தல்களுக்குத் துல்லியமானபுதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையானது என்பதால், வாக்காளர் பட்டியலின் தரம், துல்லியம், நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் முனைப்புடன் கவனம் செலுத்தப்படுகிறது. 'தேர்தல் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்-2021' மூலம் 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950'-ன் பிரிவு 14-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, ஒரு ஆண்டில் வாக்காளராகப் பதிவு செய்வதற்கு நான்கு தகுதித் தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்கத் திருத்தம் அல்லது சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை ஆணையம் மேற்கொண்டது.

 

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள தட்டான்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகர் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அசாமில் நகோன் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முறையான அறிவிக்கை அரசிதழில் இம்மாதம் 9-ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி இம்மாதம் 16-ம் தேதியாகும். வேட்புமனுக்களை மீதான பரிசீலனை இம்மாதம் 17-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு இம்மாதம் 19-ம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும், இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307574&reg=3&lang=1

***

TV/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2307737) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Bengali