குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குவஹாத்தி எஸ்எஸ்யுஎச்எஸ் பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2026 6:05PM by PIB Chennai

குவஹாத்தியில் உள்ள ஸ்ரீமந்த சங்கரதேவ சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமான எஸ்எஸ்யுஎச்எஸ் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில்  குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்பட்டம் பெறுபவர்கள், கருணை, அறநெறி, அறிவியல் மேன்மை ஆகியவற்றை நிலைநிறுத்தி, தங்களது அறிவையும் திறமைகளையும் மனிதகுல சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீமந்த சங்கரதேவரின் பெயரால் அழைக்கப்படும் இந்தப் பல்கலைக்கழகம், சுகாதார அறிவியல் கல்வி, ஆராய்ச்சி, பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்று கூறினார்பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்தார். 44 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு மருத்துவச் செலவுகளில் சுமார் ரூ. 2 லட்சம் கோடியைச் சேமிக்க உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறையில் அசாமின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2021-ல் ஏழாக இருந்த நிலையில், தற்போது 15 ஆக இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், மேலும் ஒன்பது கல்லூரிகள் கட்டுமானத்தில் உள்ளதாகவும் கூறினார். வடகிழக்குப் பகுதியின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையான குவஹாத்தி எய்ம்ஸ் கட்டமைப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

இளைஞர்கள் ஆரோக்கியமான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி, போதை பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்குப் பங்களிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, தலைமைச் செயலாளர் டாக்டர் ரவி கோட்டா, எஸ்எஸ்யுஎச்எஸ் துணைவேந்தர் டாக்டர் அனுப் குமார் பர்மன், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307182&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307204) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Malayalam