பாதுகாப்பு அமைச்சகம்
சர்வதேச விமானக் கண்காட்சிக்காக இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு எகிப்து சென்றடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
06 SEP 2026 12:59PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு, எல் அலமெய்ன் சர்வதேச விமான நிலையத்தில் 2026 செப்டம்பர் 08 முதல் 10 வரை நடைபெறவிருக்கும் எல் அலமெய்ன் சர்வதேச விமானக் கண்காட்சியின் 2-வது பதிப்பில் பங்கேற்பதற்காக எகிப்து சென்றடைந்துள்ளது.
இக்குழு, மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட தொடர் சாகச நிகழ்ச்சிகள் மூலம், தங்களின் துல்லியம், தொழில்முறை திறன்கள், பறக்கும் திறன்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும். இது, இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு, தூதரக உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்திய விமானப்படையின் சர்வதேச ஈடுபாடுகளில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான துருவ்வை இயக்கும் சாரங் குழு, வான்வழி சாகசங்களுக்குப் புகழ்பெற்றது.
சாரங் குழு, தனது புகழ்பெற்ற 'டால்பின் லீப்' சாகசத்தை வெளிப்படுத்துவதோடு, 'ஸ்பாட் ஸ்டால் டர்ன்' எனப்படும் ஒரு புதிய சாகசத்தையும் செய்து காண்பிக்கும். இக்குழுவின் பங்கேற்பு, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கும் விமானப் போக்குவரத்து ஆர்வலர்களுக்கும், இந்திய விமானப்படையின் சாகசத்தையும் துணிச்சலான மனப்பான்மையையும் காண்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307118®=48&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307143)
வருகையாளர் எண்ணிக்கை : 8