தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஞ்சல் கட்டண வங்கி தனது 9-வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது; வணிகர்களுக்காகப் புதிய டிஜிட்டல் தளங்கள் அறிமுகம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 7:50PM by PIB Chennai

இந்திய அஞ்சல் கட்டண வங்கி  தனது 9-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியுள்ளது. கிராமப்புறங்களில் 77% மற்றும் பெண்கள் 49% உட்பட 13.25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ரூ.29,104 கோடி வைப்புத்தொகையைப் (டெபாசிட்) பெற்றுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில், வணிகர்களுக்காக 'டாக் பே சவுண்ட்பாக்ஸ்'மற்றும் வாடிக்கையாளர்களுக்கான புதிய டிஜிட்டல் காப்பீடு மற்றும் பரஸ்பர நிதி தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுயஉதவிக் குழுக்கள், சுரக்ஷித் மற்றும் சம்பூர்ணா சேமிப்புக் கணக்குகள் போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் நிதி உள்ளடக்கத்தை இவ்வங்கி தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்திய அஞ்சல் துறையின் பரந்த கட்டமைப்பைப் பயன்படுத்தி, நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நவீன டிஜிட்டல் வங்கிச் சேவைகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் வழங்குவதில் இந்திய அஞ்சல் கட்டண வங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305689&reg=3&lang=1

 

(Release ID: 2305689)

 

SS/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306592) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Malayalam