தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 33-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, மைகவ் தளத்தில் இணையவழி வினாடி வினாப் போட்டி

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 5:55PM by PIB Chennai

தனது 33-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம், மைகவ் தளத்துடன் இணைந்து இன்று 01.09.2026 அன்று 'மனித உரிமைகள் வினாடி வினா 2026: வாழ்வு, சுதந்திரம், சமத்துவம், கண்ணியத்தைக் கொண்டாடுதல்' என்ற தலைப்பில் வினாடி வினாப் போட்டியைத் தொடங்கியுள்ளது. இந்த இணையவழி வினாடி வினா, மைகவ் தளத்தில் 2026 அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெறும். இதில் 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களும் பங்கேற்கலாம்.

 

இந்த வினாடி வினாப் போட்டியானது, மனித உரிமைகள், 1993-ம் ஆண்டின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நாடு முழுவதும் மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பங்களிப்புகள் ஆகியவை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பங்கேற்பாளர்கள் 300 வினாடிகளுக்குள் அதிகபட்சமாக 15 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் வெற்றியாளர்களுக்கு முறையே ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், அடுத்த ஏழு வெற்றியாளர்களுக்குத் தலா ரூ.2,000 ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

 

மனித உரிமைகள் வினாடி வினாவில் பங்கேற்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அறிய, பங்கேற்பாளர்கள் பின்வரும் மைகவ் இணையதள முகவரியைப் பார்வையிடலாம்:

 

https://quiz.mygov.in/quiz/human-rights-quiz-2026-celebrating-life-liberty-equality-and-dignity/

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305583&reg=3&lang=1

(Release ID: 2305583)

 

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306587) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati , Telugu