மாநிலங்களவைச் செயலகம்
செஷல்ஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகளைக் குடியரசு துணைத்தலைவர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 3:03PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், செஷல்ஸ் நாடாளுமன்ற சபாநாயகர் திருமிகு அசரேல் எர்னஸ்டா தலைமையிலான செஷல்ஸ் நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
சபாநாயகர், அவரது குழுப் பிரதிநிதிகளை வரவேற்றக் குடியரசு துணைத்தலைவர், செஷல்ஸ் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். செஷல்ஸ் நாடாளுமன்றத்தின் முதலாவது பெண் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள திருமிகு அசரேல் எர்னஸ்டாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையே நெருக்கமான, நீண்டகால நட்புறவுகளை நினைவுகூர்ந்த குடியரசு துணைத்தலைவர், செஷல்ஸ் நாடு தம் மனதில் சிறப்பிடம் பெற்றுள்ளதாகக் கூறினார். இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராகத் தாம் பொறுப்பேற்றப் பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக 2025 அக்டோபர் மாதம் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக செஷல்ஸ் நாட்டிற்குச் சென்றதை அவர் நினைவுகூர்ந்தார். அத்துடன் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி, துணை அதிபர் திரு செபாஸ்டியன் பிள்ளை ஆகியோருடனான சந்திப்புகளையும் செஷல்ஸ் நாட்டு மக்கள் காட்டிய அன்பையும், விருந்தோம்பலையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இருதரப்பு நட்புறவில் 2026-ம் ஆண்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், 2026 ஜூன் மாதத்தில் செஷல்ஸில் நடைபெற்ற ஐம்பதாவது தேசிய தினக் கொண்டாட்டங்களில் இந்திய பிரதமர் பங்கேற்றதையும் அதேபோல் 2026 பிப்ரவரி மாதம் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதையும் அவர் குறிப்பிட்டார். செஷல்ஸ் நாட்டு துணை அதிபர் திரு செபாஸ்டியன் பிள்ளை 2026 பிப்ரவரி மாதம் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திருந்ததையும் குடியரசு துணைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306309®=3&lang=1
***
SS/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306503)
வருகையாளர் எண்ணிக்கை : 9