வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரவு மையங்களை அமைப்பதற்கு உலகின் சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 4:07PM by PIB Chennai

இந்தியாவின் தரவு மைய சூழலை விரிவுபடுத்துவதற்காக எளிதாக வர்த்தகம் செய்வது குறித்த தலைமைச் செயல் அதிகாரிகள் வட்டமேசை கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், தரவு மையங்களை அமைப்பதற்கு உலகின் சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது என்று கூறினார். தரவு மையத்துறையை மேலும் ஊக்குவிப்பது, இந்தியாவில் எளிமையாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்துவது குறித்து இத்துறையைச் சேர்ந்தவர்களுடன் உரையாடுவதற்கு இந்த வட்டமேசை கூட்டம் பயனுள்ள தளத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

உலகளாவிய நிச்சயமற்றத்தன்மை, ஏற்ற, இறக்கங்களுக்கு இடையே நாட்டின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த திரு கோயல், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாடு 7.8 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305918&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2306094) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali