ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வங்கிகள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்களுடனான உயர்நிலைக் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 4:42PM by PIB Chennai

சுயஉதவிக் குழுக்கள் – வங்கிகளுக்கு இடையேயான இணைப்பு, தனிநபர் தொழில்முனைவோருக்கான நிதியுதவி குறித்த உயர்நிலைக் குழுக் கூட்டம் 2026 செப்டம்பர் 3 அன்று மும்பையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர்கள் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, திரு கம்லேஷ் பஸ்வான்  ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி, நிதிச் சேவைகள் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நபார்டு மத்திய அமைச்சகங்கள், மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்கள், இதர சம்பந்தப்பட்ட துறையின் பிரதிநிதிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு முன்பாக மத்திய வேளாண் அமைச்சர், சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் உரையாடவுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305947&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306081) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali , Gujarati , Malayalam