மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மொழி செயற்கை நுண்ணறிவில் ஒத்துழைப்பது குறித்து டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவும், காத்மண்டு பல்கலைக்கழகமும் விவாதித்தது

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 3:42PM by PIB Chennai

மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா கழகத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு, காத்மண்டு பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு குழுவினருடன் உரையாடல் அமர்வை நடத்தியது. அதைத்தொடர்ந்து, துணைவேந்தருடன் சந்திப்பு நடைபெற்றது. நேபாளத்திற்கான மொழி தொழில்நுட்பங்களை வலுப்படுத்துவதில் உள்ள பகிரப்பட்ட ஆர்வத்துடன் மொழி செயற்கை நுண்ணறிவின் கூட்டு ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதில் இந்த உரையாடல் கவனம் செலுத்தியது.

செயற்கை நுண்ணறிவில் உரிய முக்கியத்துவம் இல்லாத மொழிகளுக்காக புதிய மாதிரிகளை உருவாக்கும் அதே சூழலில் தற்போதுள்ள மொழி மாதிரிகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் உரையாடல் நடைபெற்றது.

நேபாளத்தின் மொழி பன்முகத்தன்மையை டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு சூழலில் கொண்டு செல்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் பிரசாலித் லிபி, ரஞ்சனா லிபி உள்ளிட்ட பாரம்பரிய எழுத்து முறைகளுடன் நேபாளி, நேவாரி, தமாங், குருங் போன்ற மொழிகளுக்கும் கவனம் செலுத்தப்பட்டது.     

மொழி தரவுகளில் உள்ள சவால்களை மையமாகக் கொண்டு இந்த உரையாடல் நடைபெற்றது. மொழிப்பெயர்ப்பு திறன்களை மேம்படுத்துவது, மொழி மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கவும், செழுமைப்படுத்தவும், விரிவாக்கவும் தேவைப்படும் கணினி தேவைகளை நிறைவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  கொண்செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305906&reg=3&lang=1

***

SS/IR/RJ/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2306073) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati