சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களுக்கு ஒருங்கிணைந்த, கூட்டு முயற்சிகள் மூலமான தீர்வுகள் தேவை – மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 2:56PM by PIB Chennai

பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, மாசுபாடு, இயற்கை வளங்கள் குறைதல் ஆகிய சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களுக்கு ஒருங்கிணைந்த, கூட்டு முயற்சிகள் மூலமான தீர்வுகள் தேவை என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்தோ – ஜெர்மன் சுற்றுச்சூழல் மன்றத்தின் நான்காவது கூட்டத்திற்கு ஜெர்மனியின் பருவநிலைப் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு கார்ஸ்டன் ஸ்னைடருடன் இணைந்து தலைமை தாங்கினார். தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு யாதவ், வளங்களைச் சிக்கனமாக பயன்படுத்தக்கூடிய நீடித்த வளர்ச்சிப் பாதைகளை உருவாக்குவதற்கு வலுவான ஒத்துழைப்புத் தேவை என்று கூறினார்.

சுற்றுச்சூழல் நீடித்த தன்மை தொடர்பான விவகாரங்களை இனிமேல் தனியாக அணுக முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியதுடன், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதில் ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் சார்ந்த இலக்குகளும், பொருளாதார வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று வேறுபட்ட நோக்கங்களாக இருக்க வேண்டியதில்லை என்பதை இந்தியாவின் வளர்ச்சி அனுபவம் நிரூபித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305426&reg=3&lang=1

***

SS/IR/PS/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2305678) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam