மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியா பாஷினிப் பிரிவு நேபாளத்தில் பயிலரங்கை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 3:54PM by PIB Chennai

மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ்  இயங்கும் டிஜிட்டல் இந்தியா கழகத்தின் டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம், பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து பாஷினி சங்கம்: சர்வதேச ஈடுபாட்டுப் பயிலரங்கை (நேபாளம்) ஏற்பாடு செய்தது. இப்பயிலரங்கு அரசு, கல்வித்துறை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, புதுமைக்கண்டுபிடிப்பு துறைகளைச் சேர்ந்தவர்களைச் ஒருங்கிணைத்து டிஜிட்டல் சேவைகள், தகவல்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை விருப்பபட்ட மொழிகளில் அணுகுவதற்கு வழிவகுப்பதில் பலமொழி, குரலுக்கு முன்னுரிமை அளிக்கும் செயற்கை நுண்ணறிவின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தது.

மொழி தொழில்நுட்பம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்காக டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவுக்கும் காத்மாண்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மொழி செயற்கை நுண்ணறிவில் இந்தியா-நேபாளம் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இப்பயிலரங்கம் முக்கிய அம்சமாக அமைந்தது. இரு நாடுகளிலும் உள்ள சமூகத்தினரில் மொழியியல் தேவைகளுக்குப் பதிலளிக்கும் தொழில்நுட்பம், தரவுத் தொகுப்புகள், உள்ளூர் பயன்பாடுகளை இணைந்து உருவாக்குவதன் மூலம் இக்கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305475&reg=3&lang=1

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305663) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Kannada