ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரக்கு போக்குவரத்துத் திறனை மேம்படுத்த அத்ரா- ஜாய்சந்திபஹர் இடையே ரூ.272 கோடி செலவில் புறவழித்தடம் அமைப்பதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 11:24AM by PIB Chennai

தென் கிழக்கு ரயில்வேயில் த்ரா - ஜாய்சந்திபஹர் இடையே ரூ.272 கோடி செலவில் 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு புறவழித்தடம் அமைப்பதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம், எதிர்வரும் மூன்றாவது வழித்தடத்திற்கு தனிப்பாதை, இருவழிப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு வகை செய்யும். இந்த புறவழித்தடம் செயில் நிறுவனத்தின் 23.40 மில்லியன் டன் இரும்புத்தாது தேவை, பிசிசிஎல் நிறுவனத்தின் நாளொன்றுக்கு 45 ரயில் பெட்டிகள் இயக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும்.

அத்ரா – ஜாய்சந்திபஹர் - சங்கா புறவழித்தடமானது அத்ரா - ஜாய்சந்திபஹர் பிரிவில் தற்போதுள்ள தடைகளையும், தாமதங்களையும் களைய உதவும்.

இத்திட்டம் நிறைவடைந்த பின் ஆண்டுக்கு 8.88 மில்லியன் டன் சரக்குகள் கூடுதலாக எளிதாக இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜாய்சந்திபஹர் - அத்ரா பிரிவில் தற்போதைய வழித்தட திறன் 47.50 சதவீதம் ஆகும். இது 2028-29-ம் ஆண்டிற்குள் 56.45 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் புறவழித்தடம் இந்திய ரயில்வேக்காக அடையாளம் காணப்பட்ட எரிசக்தி, கனிமங்கள், சிமெண்ட் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டம் தொழிற்துறையின் சரக்குகளின் போக்குவரத்தை வலுப்படுத்தி எதிர்காலப் போக்குவரத்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305319&reg=3&lang=1

***

SS/IR/PS/SM    


(வெளியீட்டு அடையாள எண்: 2305519) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Kannada