ரெயில்வே அமைச்சகம்
நேபாள்கஞ்ச் சாலை - நான்பாரா - பஹ்ரைச், அகல ரயில் பாதைத் திட்டம் : மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 6:45PM by PIB Chennai
உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், நேபாள்கஞ்ச் சாலை-நான்பாரா-பஹ்ரைச் அகல ரயில் பாதை, மின்மயமாக்கல் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தனர். 56.15 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை சுமார் ரூ.730 கோடி செலவில், அகலப் பாதையாக மாற்றப்பட்டு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நான்கு ரயில் சேவைகளும் நேபாள்கஞ்ச் சாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு இதற்கான நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்த மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவும் நேபாளமும் வலுவான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்தடையும் பயணிகளுக்காக, ரயில்வே ஏற்பாடுகளைச் செய்து வருவதாக திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
திறந்து வைக்கப்பட்ட ரயில் பாதை பிரிவு குறித்துப் பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், நேபாள்கஞ்ச் சாலை-நான்பாரா-பஹ்ரைச் பிரிவு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதன் மூலம் தற்போது நாட்டின் விரிவான ரயில் கட்டமைப்புடன் இது இணைக்கப்பட்டுள்ளது என்றார். நாடு முழுவதும் அகல ரயில் பாதை திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305150®=3&lang=1
(Release ID : 2305150)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305274)
வருகையாளர் எண்ணிக்கை : 6