நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 ஜூலை மாதம் வரையிலான மத்திய அரசின் கணக்குகளின் அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 5:02PM by PIB Chennai

2026-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திரக் கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

அதன் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: -

 

மத்திய அரசு, ஜூலை 2026 வரை ரூ.13,06,709 கோடி வருவாய் பெற்றுள்ளது. இதில் ரூ. 8,44,560 கோடி வரி வருவாய்.  ரூ. 4,23,013 கோடி வரி சாரா வருவாய்.  ரூ. 39,136 கோடி கடன் சாரா மூலதன வரவுகள் ஆகியவை அடங்கும்.

 

இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசால் மாநில அரசுகளுக்கு வரிப் பங்கீட்டுத் தொகையாக ரூ. 3,72,354 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசால் செய்யப்பட்ட மொத்த செலவினம் ரூ. 17,61,853 கோடி ஆகும். இதில் ரூ. 13,11,218 கோடி வருவாய்க் கணக்கிற்கும், ரூ. 4,50,635 கோடி மூலதனக் கணக்கிற்கும் செலவிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினத்தில், ரூ. 4,26,566 கோடி வட்டி செலுத்துதலுக்காகவும், ரூ. 1,53,513 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305025&reg=3&lang=1

(Release ID : 2305025)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305210) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी