ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விபி-ஜி ராம் ஜி சட்டம் 2025 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:10PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு உறுதி மற்றும் கிராமப்புற வாழ்வாதார இயக்க சட்டம் 2025- (விபி-ஜி ராம் ஜி) திறம்படச் செயல்படுத்துவதற்கும்பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அலுவலர்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டநாடு தழுவிய மாவட்ட அளவிலான இயக்கம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் மூன்று நிலைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அலுவலர்களுக்குசட்டத்தின் விதிகள்அத்துடன் அவர்களின் பங்களிப்பு, பொறுப்புகள் குறித்து அறிமுகப்படுத்துவதற்காக பஞ்சாயத்து பிரதிநிதிகள்  கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.

இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1,338 பஞ்சாயத்து கூட்டங்கள் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், 5.26 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள்அலுவலர்கள், அதிகாரிகள்பணியாளர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

இதுவரை, 23 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் திட்டமிடப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் கூட்டங்களை நிறைவு செய்துள்ளன. இவற்றில் ஆந்திரப் பிரதேசம்அசாம்பீகார்சத்தீஸ்கர்கோவாகுஜராத்ஹரியானாஇமாச்சலப் பிரதேசம்கர்நாடகாகேரளம், மிசோரம்நாகாலாந்துபஞ்சாப்சிக்கிம்தமிழ்நாடுதெலங்கானாதிரிபுராஉத்தராகண்ட்மேற்கு வங்கம்அந்தமான்,  நிக்கோபார் தீவுகள்தாத்ரா,  நாகர் ஹவேலி, டாமன்,  டையூஜம்மு,  காஷ்மீர்புதுச்சேரி ஆகியவை அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304961&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305178) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali , Bengali-TR , Telugu , Kannada