புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026–27–ம் நிதியாண்டில் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு மதிப்பீடுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:00PM by PIB Chennai

2026–27–ம் நிதியாண்டில் முதல் காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு மதிப்பீடுகளை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் நிலையான விலைகள் (2022–23), நடப்பு விலைகள் ஆகிய இரண்டிலும் செலவின அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

2022–23–ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட வருடாந்திர, காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் புதிய தொகுப்பை 2026 பிப்ரவரி 27 அன்று அமைச்சகம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, 2025–26–ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகள் 2026 ஜூன் 5 அன்று வெளியிடப்பட்டது.

2022 – 23, 2023 – 24, 2024 – 25–ம் நிதியாண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வருடாந்திர திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுகளை தேசிய கணக்குகள் புள்ளியியல் இன்று வெளியிட்டுள்ளது. (https://mospi.gov.in/publications-reports/innerpage/2861)

இதில் 2022 - 23-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியாளர் விலைக்குறியீடு, வங்கிச் சேவைகள் விலைக்குறியீடு ஆகியவற்றின் புதிய தொகுப்புகள், பல்வேறு நிர்வாக ஆதாரங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304949&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2305123) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English