இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு புதுதில்லியில் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2026 12:24PM by PIB Chennai
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில், இன்று (30.08.2026) பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி ஓட்டும் இயக்கத்திற்கு' மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். இந்த வாரம் தேசிய விளையாட்டு தினச் சிறப்பு நிகழ்வாக 'பிரிக்ஸ் ஓட்டம் மற்றும் மிதிவண்டிப் பயணம்' என்ற பெயரில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், மல்யுத்த வீரர் சங்கிராம் சிங், நடிகை மதுரிமா துலி உள்ளிட்டோர் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தி வழிநடத்தினர். நாடு முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, வாராந்திர மிதிவண்டி இயக்கத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.
புதுதில்லியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் பாரத் மண்டபத்தில் இந்தியா 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் 88-வது பதிப்பு தனித்துவமான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பைச் சேர்ந்த சிறப்புப் பிரமுகர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இந்த வார நிகழ்வு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உடல்தகுதி மேம்பாடு, சுற்றுச்சூழல் மாசு குறைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைவு ஆகிய மூன்று முக்கியப் பலன்களை மிதிவண்டி ஓட்டுதல் தருகிறது என்று சுட்டிக்காட்டிய டாக்டர் மாண்டவியா, மிதிவண்டி ஓட்டுவதைத் தங்களது வாராந்திர வழக்கமாக மாற்றிக்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
பல்வேறு பிரிக்ஸ் நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். மத்திய விளையாட்டுத்துறைச் செயலாளர் திரு ஹரி ரஞ்சன் ராவ், இளைஞர் நலத்துறைச் செயலாளர் திரு சுனில் பாலிவால், வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் பிரிவுச் செயலாளர் திரு சுதாகர் தலெலா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304633®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304720)
வருகையாளர் எண்ணிக்கை : 7