வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா–சிலி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2026 10:51AM by PIB Chennai
இந்தியா - சிலி விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, மத்திய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், சிலி அரசின் சர்வதேசப் பொருளாதார உறவுகள் துணை அமைச்சர் திருமதி பவுலா எஸ்டீவெஸ் வெயின்ஸ்டீனை 2026 ஆகஸ்ட் 26 அன்று சிலியின் சாண்டியாகோவில் சந்தித்தார்.
இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கும் மக்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி, இந்தியா - சிலி பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மைக்கும், சமச்சீரான அணுகுமுறைக்குமான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
வலுவான, வளர்ந்து வரும் இந்தியா - சிலி உறவை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் நோக்கங்களை வணிக ரீதியாக அர்த்தமுள்ள வாய்ப்புகளாக மாற்றுவதை உறுதி செய்வதையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
சுகாதாரம், மருந்துப் பொருட்கள், எரிசக்தி, கனிமங்கள், விவசாயம், இயந்திரங்கள், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மகத்தான சாத்தியக்கூறுகளை மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் எடுத்துரைத்தார். மேலும், இந்த ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304610®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304674)
வருகையாளர் எண்ணிக்கை : 5