குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆராய்ச்சி, புத்தாக்கம், கல்வி- தொழில்துறை இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம்: குடியரசு துணைத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 29 AUG 2026 4:04PM by PIB Chennai

கல்வி நிறுவனங்கள், அடிப்படை கல்வியை வழங்குவதுடன், அறிவு, ஆராய்ச்சி, புத்தாக்கத்திற்கான உலகின் மையங்களாக உருவெடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கழக அறக்கட்டளையின் நிறுவனர் தின விழா,  அறிவுக்கூடம் ஆகியவற்றின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

இந்த அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மூலம், ஒரு லட்சம் பேர் கல்வியறிவைப் பெற்றுள்ளனர் என்றும், அப்பகுதியில், கல்வி வளர்ச்சிக்கு இந்த அறக்கட்டளை முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் அவர் கூறினார். ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தக் கல்வி நிறுவனங்கள் கொண்டுள்ள உலக அளவிலான தொடர்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்கள் தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்வதுடன், ஆராய்ச்சி சார்ந்த கல்வியை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சி, புத்தாக்கம், காப்புரிமை  பெறுதல் ஆகியவற்றில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில், தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் திரு சி பி ராதாகிருஷ்ணன்  கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ், கேவிஐடி அறக்கட்டளைத் தலைவர் திரு தேவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304502&reg=3&lang=1   

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304551) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam