வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா - அர்ஜென்டினா இடையேயான உத்திசார், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தக் கூட்டு வர்த்தகக் குழுக் கூட்டத்தில் முடிவு
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2026 10:11AM by PIB Chennai
இந்தியா – அர்ஜென்டினா இடையேயான நான்காவது கூட்டு வர்த்தகக் குழுக் கூட்டம், 2026 ஆகஸ்ட் 24 அன்று பியூனஸ் அயர்ஸில் உள்ள பலேசியோ சான் மார்ட்டினில் நடைபெற்றது.
மத்திய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழுவும், சர்வதேசப் பொருளாதார உறவுகளுக்கான செயலாளர் தூதர் திரு பெர்னாண்டோ புரூன் தலைமையிலான அர்ஜென்டினாவின் பிரதிநிதிகள் குழுவும் இக்கூட்டத்தில் பங்கேற்றன.
2025-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட அர்ஜென்டினா பயணத்தின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட செயல்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டுக் கூட்டத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உத்திசார் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை இருதரப்புப் பிரதிநிதிகள் குழுக்களும் மீண்டும் வலியுறுத்தின.
இந்தியா - அர்ஜென்டினா இடையேயான இருதரப்பு வர்த்தகம், கடந்த 2025-ம் ஆண்டில் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 17 சதவீதத்திற்கும் அதிகமான நிலையான வருடாந்திர வளர்ச்சியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304463®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304496)
வருகையாளர் எண்ணிக்கை : 10