குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
‘ஞானி அர்த்தா’ செயற்கை நுண்ணறிவுத் தொகுப்பை குடியரசு துணைத்தலைவர் அறிமுகப்படுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 5:55PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், 'ஞானி ஏஐ' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'ஞானி அர்த்தா' என்ற உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான செயற்கை நுண்ணறிவுத் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். 'எவான் 3.3' என்பது ஒரு மொழி மாதிரியாகும். அதேவேளையில், 'பிளெக்ஸஸ்' என்பது செயற்கை நுண்ணறிவுத் திறனை நிகழ் உலகப் பணிகள், நிறுவனங்களுடன் இணைக்கும் ஒரு தளமாகும்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர், செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா அடைந்துள்ள விரைவான முன்னேற்றத்தை சுட்டிக்காட்டினார். இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையங்கள் போன்றவை, நாட்டின் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றத்திற்கான உத்வேகத்தில் பெரும்பகுதி பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையிலிருந்தே கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். பிரதமரின் அரசியல் உறுதிப்பாடும் 'இந்தியாவுக்கே முன்னுரிமை' என்ற அணுகுமுறை மீதான அர்ப்பணிப்பும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தி வருவதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தொழில்நுட்பத் துறையில் தன்னிறைவின் அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்தியா வெறும் தொழில்நுட்ப நுகர்வோராக மட்டுமே இருக்கக்கூடாது என்று கூறினார். "நாம் எப்போதும் நுகர்வோராகவே இருக்கக்கூடாது; மற்றவர்கள் பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பங்களை நாமே உருவாக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு, உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை குடியரசு துணைத்தலைவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304330®=3&lang=1
****
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2304446)
வருகையாளர் எண்ணிக்கை : 10