பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலங்கை கடற்படைத் தளபதி இந்தியா வருகை

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 6:30PM by PIB Chennai

இலங்கை கடற்படையின் தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ, 2026 ஆகஸ்ட் 26 முதல் 29 வரை இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் . இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோவுக்கு புதுதில்லியின் சவுத் பிளாக்கில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், இன்று (27 ஆகஸ்ட் 2026) தேசிய போர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அத்துடன் இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனுடன் அவர் கலந்துரையாடினார்.

 

இந்தப் பயணத்தின் போது, ​​வைஸ் அட்மிரல் பெர்னாண்டோ இந்தியாவின் உயர்நிலை பாதுகாப்புத் துறை அதிகாரிகளைச் சந்திப்பதோடு, பாதுகாப்புத் தொழில் துறைப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாட உள்ளார்.

 

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைப் பயிற்சி நிறுவனங்களையும் தெற்கு கடற்படைத் தலைமையகத்தையும் திரு  டாமியன் பெர்னாண்டோ பார்வையிடுவார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303881&reg=3&lang=1

(Release ID : 2303881)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2304008) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam