குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 8:00PM by PIB Chennai

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

"ரக்ஷா பந்தன் திருநாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ரக்ஷா பந்தன் பண்டிகை, தொன்றுதொட்டு நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. நம்பிக்கையுடன் மணிக்கட்டில் கட்டப்படும் 'ராக்கி' எனும் கயிறு, பாதுகாப்பின் புனிதமான பிணைப்பாகக் கருதப்படுகிறது. இதுவே 'ரக்ஷா பந்தன்' என்று அழைக்கப்படுகிறது. பல ஸ்லோகங்களிலும் மந்திரங்களிலும் "ரக்ஷே, மா சல, மா சல" என்ற சொற்களைக் காண முடிகிறது. "இந்தப் பாதுகாப்பின் பிணைப்பு என்றென்றும் நிலைத்திருக்கட்டும்" என்ற வேண்டுதலையே இந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.

 

சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் 'ராக்கி' எனும் கயிற்றைக் கட்டும் ஒரு சமூக விழாவாக ரக்ஷா பந்தன் பிரபலமடைந்துள்ளது. இது சகோதர-சகோதரிகளுக்கு இடையிலான உறவாக மட்டுமின்றி, உடன்பிறந்தோர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கு இடையிலான அன்பு, மரியாதை மற்றும் பரஸ்பரப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு உறவும் நம்பிக்கை, உணர்வுப்பூர்வமான புரிதல், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகிய தூண்களின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது.

 

இந்த நன்னாளில், நமது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த உறுதி ஏற்போம். இத்தகைய உணர்வுடன் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற  இலக்கை நோக்கி நாம் முன்னேறிச் செல்வோம்.”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303931&reg=3&lang=1

****

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2304000) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam