உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் அம்ரேலியில் 'குஜராத் கௌரவ் சரோவர்' என்ற நீர்நிலையை திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 5:29PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (27.08.2026) குஜராத்தின் அம்ரேலியில் 'குஜராத் கௌரவ் சரோவர்' என்ற நீர் நிலையைத் திறந்து வைத்தார். இந்த 'குஜராத் கௌரவ் சரோவர்' ஹரிகிருஷ்ணா குழுமம், தோலகியா அறக்கட்டளை ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா , கிணறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளை அமைப்பவர்கள் பெரிய புண்ணியத்தைப் பெறுகிறார்கள் என்று கூறினார். இப்போதெல்லாம் குறைந்த மழைப்பொழிவு நிலவுவதால், ஒவ்வொரு துளி மழையையும் சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதை முறையாகச் செய்தால் வறட்சி ஏற்படும் என்ற அச்சம் ஒருபோதும் ஏற்படாது என்று அவர் கூறினார். 21 ஏக்கர் பரப்பளவில் 40 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட 'குஜராத் கௌரவ் சரோவர்', விவசாயத்திற்கும் குடிநீருக்கும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

 2001-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சரானபோது, ​​சௌராஷ்டிரா, வட குஜராத் பகுதிகள் முழுவதும் நிலவிய தண்ணீர் பற்றாக்குறை விரைவாகத் தீர்க்கப்பட்டு, வறட்சி என்பது இல்லாமல் ஆகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

 

திரு நரேந்திர மோடி முதலமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் ஆன பிறகு, 2026-ம் ஆண்டு வரை குஜராத் எந்தவொரு பெரிய வறட்சியையும் சந்திக்கவில்லை என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். ஒவ்வொரு துளி நீரும் மீண்டும் நிலத்திற்குச் செல்லும் வகையில் சொட்டு நீர்ப்பாசன முறைகள், தெளிப்பு நீர்ப்பாசன முறைகள், மழைநீர் சேமிப்பு இயக்கம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளதை திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303814&reg=3&lang=1

(Release ID : 2303814)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303997) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Kannada