குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவை உறுப்பினர் திரு கன்ஷ்யாம் திவாரி எழுதிய நூல் ஒன்றை குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 6:22PM by PIB Chennai

மாநிலங்களவை உறுப்பினர் திரு கன்ஷ்யாம் திவாரி எழுதிய 'சங்கல்ப் சே சித்தி கா மோடி யுக்' (தீர்மானத்தில் இருந்து சாதனை வரை - மோடியின் யுகம்) என்ற நூலை, குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், புதுதில்லியில் குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் இன்று (27.08.2026) வெளியிட்டார்.

 

'சங்கல்ப் சே சித்தி கா மோடி யுக்' என்ற இந்த தலைப்பு சக்திவாய்ந்த, எழுச்சியூட்டும் செய்தியைக் கொண்டுள்ளது என்று கூறிய திரு சி பி ராதாகிருஷ்ணன், தீர்மானம் என்பது வெறும் விருப்பம் மட்டுமல்ல எனவும் அது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, ஒழுக்கத்தால் அடையக் கூடிய ஒரு உறுதியான அம்சம் என்றும் கூறினார். இந்தப் புத்தகம், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் பயணத்தையும், நிர்வாக சாதனைகளையும் எடுத்துரைக்கிறது என்றும் அவர் கூறினார் .

 

 

சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், கேசவ் பலிராம் ஹெட்கேவார், வீர சாவர்க்கர், அடல் பிஹாரி வாஜ்பாய் உள்ளிட்ட மாபெரும் தேசிய சிந்தனையாளர்களின் தீர்மானத்திற்கும் தற்கால இந்தியாவில் அதன் நனவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பைப் படம்பிடித்துக் காட்டும் வகையில், இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் பொருத்தமாக விவரித்துள்ளார் என்பதையும் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

 

இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவை உறுப்பினரும் நூலாசிரியருமான திரு கன்ஷ்யாம் திவாரி, மாநிலங்களவை உறுப்பினர் திரு லஹர் சிங் சிரோயா, பிரபாத் பிரகாஷன் பதிப்பகத்தைச் சேர்ந்த திரு பவன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303873&reg=3&lang=1

(Release ID : 2303873)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303963) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam