சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க 3 குறும்படங்களை மத்திய சமூக நீதி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2026 5:14PM by PIB Chennai
போதைப்பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 60 வினாடிகள் கொண்ட 3 குறும்படங்களை மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. நாட்டில் போதைப்பொருள் தேவைக் குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை முன்னெடுத்து வரும் அமைச்சகம், போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்படும் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள், நடத்தை மாற்றங்கள், தேசிய போதை மறுவாழ்வு உதவி எண் 14446, போதைப்பொருள் பழக்கத்தை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்களிப்பு ஆகிய கருப்பொருள்களில் இக்குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போதைப் பொருளுக்கு எதிராக உரிய நேரத்தில் செயல்பட்டு, குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகம் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் இந்த குறும்படங்கள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303803®=3&lang=1
****
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303906)
வருகையாளர் எண்ணிக்கை : 10