வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலின் ஜப்பான் பயணம் நிறைவு: இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 2:55PM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஜப்பான் நாட்டில் தமது அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்தார். டோக்கியோ, நகோயா, ஒசாகா ஆகிய நகரங்களில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களின் போது, இந்தியாவில் ஜப்பானிய முதலீடுகளை அதிகரிப்பது, இருதரப்பு தொழில் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, மூலதனப் பொருட்கள், புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த வட்டமேசைக் கூட்டங்களுக்கு திரு பியூஷ் கோயல் தலைமை தாங்கினார். இந்தியாவின் இளம் திறமையாளர்களுடன் ஜப்பானின் அதிநவீன தொழில்நுட்பத் திறன்கள் இணையும் போது, செமிகண்டக்டர் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று அவர் எடுத்துரைத்தார். செமிகண்டக்டர் உதிரிபாகங்கள், மின்னணுவியல், தளவாடப் போக்குவரத்து ஆகியவற்றில் இந்தியாவில் முதலீடுகளை விரிவுபடுத்த ஜப்பானிய நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளன.

ஜப்பான் பொருளாதார அமைச்சர் திரு அகசாவா ரியோசி, கெய்டன்ரன் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்களையும் அமைச்சர் சந்தித்துப் பேசினார். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 10 டிரில்லியன் ஜப்பானிய யென் மதிப்பிலான தனியார் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இலக்கை எட்டுவது குறித்து இச்சந்திப்புகளின்போது ஆலோசிக்கப்பட்டது. உற்பத்தி, உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய முன்வருமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303714&reg=3&lang=1  

***

SS/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303860) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu