தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மகாராஷ்டிரா மருத்துவமனை தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2026 12:55PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட பெண்கள் மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2026 ஆகஸ்ட் 24 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்ததாகவும், நான்கு குழந்தைகள் காயமடைந்ததாகவும் வெளியான ஊடகச் செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. செயற்கை சுவாச கருவி வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காயமடைந்த குழந்தைகளின் தற்போதைய உடல்நிலை, அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை வழங்கப்பட்ட விவரம் ஆகியவை இந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
விபத்து நேரிட்ட போது அப்பிரிவில் ஒன்பது குழந்தைகள் இருந்ததாகவும், காயமடைந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303656®=3&lang=1
***
SS/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2303823)
வருகையாளர் எண்ணிக்கை : 10