சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஐநா பாலைவனமாதல் தடுப்பு மாநாட்டில், மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க இந்தியா அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2026 8:51AM by PIB Chennai
மங்கோலியாவின் உலான்பாதரில் நடைபெற்ற பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் 17-வது மாநாட்டில், மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்பதில் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பு முக்கியம் என இந்தியா வலியுறுத்தியது.
“மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்பதும் கால்நடை மேய்ப்புச் சமூகங்களின் நலனும்” என்ற தலைப்பிலான அமைச்சர்கள் கலந்துரையாடலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார்.
கால்நடை மேய்ப்புச் சமூகங்களை வெறும் பயனாளிகளாகக் கருதாமல், இயற்கை வளங்களின் பாதுகாவலர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பாரம்பரிய அறிவையும் நவீன அறிவியலையும் இணைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், பொருளாதார ரீதியாக பயனுள்ளதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் நில மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
இமயமலைப் பகுதிகள், மத்திய இந்தியாவின் புல்வெளிகள், தார் பாலைவனம், கச்ச் மற்றும் தென் இந்தியாவின் சோலா பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளில் இந்தியாவின் மேய்ச்சல் நிலங்கள் பரந்து காணப்படுகின்றன. செயற்கைக்கோள் அடிப்படையிலான வரைபடங்கள், சேதமடைந்த மேய்ச்சல் நிலங்களை அடையாளம் கண்டு மீட்புத் திட்டங்களை வகுக்க உதவுகின்றன.
ராஜஸ்தானின் ஓரான் புனித வனப்பகுதிகளை எடுத்துக்காட்டிய அமைச்சர், நாடு முழுவதும் சுமார் 25,000 சமூகப் பாதுகாப்புப் பகுதிகள் 6 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உள்ளதாக தெரிவித்தார். நிலையான மேய்ச்சல், நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாடு, தீவன வளர்ப்பு, வாழ்வாதார ஆதரவை ஒருங்கிணைத்து இந்தியா செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க நிதி, தொழில்நுட்பம், அறிவுப் பகிர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்தியா அழைப்பு விடுத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303391®=3&lang=1
****
SS/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303568)
வருகையாளர் எண்ணிக்கை : 11