PIB Backgrounder
azadi ka amrit mahotsav

நுண் உணவு பதனப்படுத்துதல் சந்தையில் புத்தாக்கம் - புதிய பரிமாணங்களை அடையும் இந்தியச் சுவைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 11:50AM by PIB Chennai

இந்தியா ஹேபிடேட் சென்டரில் , இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மையைக் காட்சிப்படுத்தும் ஒரு தேசிய கண்காட்சி பார்வையாளர்களை வரவேற்றது. அங்குள்ள அரங்குகளில், தனித்துவமான, பாரம்பரிய உணவுகள் கண்ணைக் கவரும் வகையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒவ்வொன்றும் அடித்தள தொழில்முனைவையும் பிராந்திய பாரம்பரியத்தின் கதையையும் சொன்னது.

 

இந்த உற்சாகமான பின்னணியில், உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், 2026 ஆகஸ்ட் 24 முதல் 25 வரை பிரதமரின் சிறு உணவு பதனப்படுத்துதல் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் சந்தை கண்காட்சியை நடத்தியது . 25 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கண்காட்சியாளர்களை இது ஒன்றிணைத்து. இச்சந்தை இந்தியாவின் வளமான சமையல் பன்முகத்தன்மையைக் கொண்டாடியது. இந்த நிகழ்வு, சிறு உணவு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், தொழில்முனைவோர் ஆகியோர் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், வாங்குபவர்களுடன் கலந்துரையாடவும், புதிய சந்தைகளை ஆராயவும் ஒரு தளத்தை வழங்கியது. சிறுதானியங்கள், மசாலாப் பொருட்கள் முதல் ஊறுகாய்கள், சிற்றுண்டிகள், பானங்கள் பிற மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய இச்சந்தை, உள்ளூர் மூலப்பொருட்களையும் பாரம்பரிய அறிவையும் நம்பிக்கைக்குரிய வர்த்தக முத்திரைகளாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தது. 2020 ஜூன் 29 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் சிறு உணவு பதனப்படுத்துதல் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், சிறு உணவு நிறுவனங்களுக்கு நிதி, தொழில்நுட்பம், வணிக உதவிகளை வழங்கி, தொழில்முனைவோர் புதிய நிறுவனங்களை நிறுவ அல்லது ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்த உதவுகிறது.

 

இத்திட்டத்தின் கடன் சார்ந்த மூலதன மானியத்தின் கீழ் , ஒரு நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் வரை, மொத்த திட்டச் செலவில் 35 சதவீதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.10 லட்சம் கடனுக்கு எதிராக ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மானியத்தைப் பெற முடியும். இந்த ஆதரவு, நிறுவனங்களை போட்டித்தன்மை மிக்கதாக மாற்றவும், அதன் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், வளர்ச்சிக்கான புதிய வழிகளைத் திறக்கவும் உதவுகிறது.

 

இவை வெறுமனே வணிகங்கள் வளர்வதைப் பற்றியவை அல்ல. மாறாகக் கனவுகள் மேலும் பெரிதாக வளர்வதற்கான தைரியத்தைக் கண்டறிவதைப் பற்றியவை. அதன் வண்ணங்கள், நறுமணங்கள், சுவைகளுக்கு அப்பால், அந்தச் சந்தை இன்னும் நீடித்து நிலைக்கும் ஒன்றை விட்டுச் சென்றது. ஒரு கனவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், அது ஒரு வாழ்க்கையையே மாற்றும் என்ற நினைவூட்டல் அது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303426&reg=3&lang=1

(Release ID: 2303426)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303552) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Gujarati