பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவின் சூர்யபேட்டையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 2:21PM by PIB Chennai

தெலங்கானாவின் சூர்யபேட்டையில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"தெலங்கானாவின் சூர்யபேட்டையில் நடந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."

 

(Release ID : 2303485)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303533) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Malayalam