நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிட்பி சார்பில் மண்டல கிராம வங்கித் தலைவர்களுக்கான மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 12:25PM by PIB Chennai

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியான சிட்பி, கூட்டுக் கடன் திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பாக, நேற்று (2026 ஆகஸ்ட் 25) புதுதில்லியில் மண்டல கிராம வங்கிகளின் தலைவர்களுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்தது. இந்த மாநாட்டிற்கு நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் திரு சஞ்சய் லோஹியா தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிட்பியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு மனோஜ் மிட்டல், நிதிச் சேவைகள் துறை, சிட்பி, நபார்டு ஆகியவற்றின் உயர்நிலை அதிகாரிகள், 28 மண்டல கிராம வங்கிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

மாநாட்டின் போது, ​​நிதிச் சேவைகள் துறை செயலாளர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்குதலை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  வட்டார வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், தங்களின் கடன் தொகுப்புகளைப் பன்முகப்படுத்தும் இலக்கை அடைய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

 

சிட்பி-யால் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த கடன் வழங்கும் தளம் என்பது, வேகமான, காகிதமில்லா கடன்களை வழங்கும் ஒரு முழுமையான டிஜிட்டல் தளமாகும். இதன் விளைவாக, கடன்கள் விரைவாக அனுமதிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. விண்ணப்ப இணையதளம் மூலம் அனைத்து விவரங்களையும் வழங்கியவுடன்,  விண்ணப்பதாரர்களுக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் கடன் ஒப்புதல்கள் குறித்துத் தெரிவிக்கப்படும். இந்த செயல்முறையானது, வாடிக்கையாளர்கள் எந்த நிலையிலும் கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, கடன் தொகையை நேரடியாகத் தங்கள் கணக்குகளில் பெறுவதை உறுதி செய்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303447&reg=3&lang=1

(Release ID : 2303447)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303496) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi