புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில் இருவார கால தூய்மைப்பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 1:13PM by PIB Chennai

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் 2026 ஜூலை 1 முதல் 15 வரை நாடு முழுவதும் உள்ள தமது கள அலுவலகங்கள் உட்பட துணை அலுவலகங்கள், சார்பு அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருவார காலத் தூய்மைப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. தூய்மை இந்தியா இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சுகாதாரம், தூய்மையை வலுப்படுத்துதல், பணியிடத்தூய்மை, ஆவண மேலாண்மை, சுற்றுச்சூழல் நீடித்த தன்மை, கழிவு மேலாண்மை, திறன்மிக்க அலுவலக நடைமுறைகள் ஆகியவற்றில் இருவார கால நிகழ்வு கவனம் செலுத்தியது.

அப்போது மரக்கன்று நடுதல், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பயிலரங்குகள் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கள செயல்பாட்டுப் பிரிவுக்கு முதல் பரிசும், தேசிய புள்ளியியல் முறைகள் பயிற்சி அகாடமிக்கு இரண்டாவது பரிசும், இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மூன்றாவது  பரிசும் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303019&reg=3&lang=1

***

SS/IR/PS/SH     


(வெளியீட்டு அடையாள எண்: 2303268) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati , Kannada