நிதி அமைச்சகம்
ரிசர்வ் வங்கியின் டாலர்-ரூபாய் பரிமாற்ற வசதி, இந்தியாவிற்குள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அந்நியச் செலாவணி வரவிற்கு வித்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
24 AUG 2026 7:53PM by PIB Chennai
2026 ஜூன் 8 அன்று தொடங்கப்பட்ட எஃப்சிஎன்ஆர் (பி) (வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அந்நியச் செலாவணி வங்கிக் கணக்குகள்) வைப்புகள், வெளிநாட்டு நாணயக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு வணிகக் கடன்கள் ஆகியவற்றிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு டாலர்-ரூபாய் அந்நியச் செலாவணிப் பரிமாற்ற வசதி, ஆகஸ்ட் 21, 2026 நிலவரப்படி மொத்தம் 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நியச் செலாவணியை ஈர்த்துள்ளது. இதன் மூலம், நாட்டிற்குள் அந்நியச் செலாவணி வரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான உயர்வு பதிவாகியுள்ளது. இதில் எஃப்சிஎன்ஆர் (பி) வைப்புகள் மட்டுமே 65.40 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பை வழங்கியிருப்பது, இத்திட்டத்திற்கு வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து கிடைத்த மகத்தான வரவேற்பை உறுதிப்படுத்துகிறது.
இத்திட்டத்தின் வெற்றி, இந்திய வங்கி அமைப்புமுறையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களின் வலிமையைப் பறைசாற்றுகிறது. எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து விஞ்சும் வேகத்தில் தங்கள் சேமிப்புகளை எஃப்சிஎன்ஆர் (பி) வைப்புத்தொகைகளில் முதலீடு செய்வதன் மூலம், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தங்களுக்குள்ள நீடித்த பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்பை அவர்கள் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
பதினொரு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் 73 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியைத் திரட்டியுள்ள இந்த நடவடிக்கை, அந்நியச் செலாவணியைத் திரட்டுவதில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிக விரைவான முயற்சியாகத் திகழ்கிறது. சுமார் மூன்று மாதங்களில் 26 பில்லியன் அமெரிக்க டாலர் வரை திரட்டிய ரிசர்வ் வங்கியின் 2013-ம் ஆண்டின் திட்ட அளவையும் வேகத்தையும் இது வெகுவாக விஞ்சியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302879®=3&lang=1
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2302935)
आगंतुक पटल : 10