சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் மருத்துவ சாதனங்கள் விதிகள், 2017-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை

प्रविष्टि तिथि: 24 AUG 2026 2:21PM by PIB Chennai

தொழில் செய்வதை எளிதாக்குதல், ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் 'மருத்துவ சாதனங்கள் விதிகள் 2017'-ல் மத்திய அரசு முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

மருத்துவ சாதனங்களில் கிருமி நீக்கம் செய்வது தொடர்பான விதிமுறைகளை எளிதாக்குதல்,  மருத்துவப் பரிசோதனைத் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்க ஏதுவாக, அங்கீகரிக்கப்பட்ட அதிகார வரம்புகளில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்த்தல் ஆகிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவ சாதனங்கள் விதிகளின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட விதி 44-ன் படி, கிருமி நீக்கம் செய்வதற்காக வெளி நிறுவனங்களின் வசதிகளைப் பயன்படுத்தும் உற்பத்தியாளர்கள் இதற்கென தனி கடன் உரிமம் பெறவேண்டிய அவசியமில்லை.

மேலும், விதி 63-ல் செய்யப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம், மருத்துவப் பரிசோதனைத் தேவைகளிலிருந்து விலக்கு அளிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அதிகார வரம்புகளின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் ஆகியவை இடம்பெற்றுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் பெற்ற மேம்பட்ட மருத்துவ சாதனங்கள் இந்தியாவில் நோயாளிகளுக்கு விரைவாகக் கிடைக்க இது வழிவகுக்கும்.

இச்சீர்திருத்தங்கள் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் உரிய நேரத்தில் இந்தியாவைச் சென்றடைவதையும், உள்நாட்டு மருத்துவ சாதனத் துறையின் போட்டித்திறனையும் உறுதிசெய்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302665&reg=3&lang=1

****

SS/SV/LDN/SH


(रिलीज़ आईडी: 2302913) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi