நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
தில்லியில் நடைபெற்ற இளையோர் நாடாளுமன்றப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது
प्रविष्टि तिथि:
24 AUG 2026 12:56PM by PIB Chennai
தில்லி தேசியத் தலைநகர் பகுதி அரசின் கல்வி இயக்குநரகம், தில்லி கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான 58-வது இளையோர் நாடாளுமன்றப் போட்டி 2025-26-ன் பரிசளிப்பு விழா ஆகஸ்ட் 25 அன்று புதுதில்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தின் ஜிஎம்சி பாலயோகி அரங்கில் நடைபெறவுள்ளது. மத்திய சட்டம், நீதி, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் கலந்துகொண்டு போட்டியில் சிறப்பாகத் திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் பரிசுகளை வழங்கவுள்ளார். இப்போட்டியில் முதல் இடம் பிடித்த தில்லி பர்வனா சாலையிலுள்ள பால பாரதி பொதுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய இளையோர் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிகழ்ச்சியை மீண்டும் பரிசளிப்பு விழாவின்போது நடத்தவுள்ளனர்.
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் தில்லி தேசியத் தலைநகர் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக இளையோர் நாடாளுமன்றப் போட்டிகளை நடத்தி வருகிறது.
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக தில்லியைச் சேர்ந்த 11 பள்ளிகளுக்கு கோப்பைகளை அமைச்சர் வழங்கவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302631®=3&lang=1
***
SS/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2302857)
आगंतुक पटल : 6