உள்துறை அமைச்சகம்
மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் மூன்று புதிய சட்டங்கள் குறித்த கண்காட்சியை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
21 AUG 2026 7:26PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் மூன்று புதிய சட்டங்கள் குறித்த கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி, மத்திய உள்துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகன், உளவுத்துறை இயக்குநர் திரு மகேஷ் தீட்சித் மற்றும் இதர முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, புதிய குற்றவியல் சட்டங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, இது விசாரணையின்போது காவல்துறைக்குக் கூடுதல் தொழில்நுட்ப ஆதாரங்களை வழங்குவதுடன், நீதி வழங்கும் செயல்முறையையும் விரைவுபடுத்தும் என்று தெரிவித்தார். வழக்குத் தொடர்தல், காவல் பணி மற்றும் நீதித்துறை சார்ந்த நடைமுறைகளுக்கான நேரத்தைக் குறைக்கும் வகையிலான சட்ட விதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு, எந்தவொரு முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) மீதான நீதி நடவடிக்கைகளும் உச்சநீதிமன்றம் வரையிலான நிலையை மூன்று ஆண்டுகளுக்குள் எட்டிவிடும் என்று அவர் கூறினார். பூஜ்ஜிய எஃப்ஐஆர் மற்றும் இ-எஃப்ஐஆர் ஆகியவற்றுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளியூர்களில் பயிலும் இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளம்பெண்கள், வங்கி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நாட்டின் எந்தப் பகுதியிலும் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குடிமக்கள் ஆகியோர் பெரிதும் பயனடைவார்கள்.
புதிய நீதி அமைப்புமுறை, தண்டனையை மையமாகக் கொண்டதாக அல்லாமல், பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இந்தச் சட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படக்கூடிய அனைத்து வழக்குகளிலும் தடயவியல் ஆய்வு மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சீக்கியர் கலவர வழக்கில் மூன்று தசாப்தங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை; போபால் விஷவாயுக் கசிவு விவகாரத்தில் நீதி கிடைக்க 26 ஆண்டுகளும், அஜ்மீர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 32 ஆண்டுகளும் ஆயின. ஆனால் இப்போது, தொழில்நுட்பம் (Technology), வெளிப்படைத்தன்மை (Transparency) மற்றும் காலக்கெடு (Timeline) ஆகிய இந்த மூன்று ‘டி’ (T) அம்சங்களின் மூலம் ஒட்டுமொத்த நீதி அமைப்புமுறையும் மாறப்போகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் காணலாம்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302104&hl=en-US®=48&lang=2
****
SS/BR/SH
(रिलीज़ आईडी: 2302202)
आगंतुक पटल : 7