தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
புனேவில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
21 AUG 2026 8:12PM by PIB Chennai
12-வது பிரிக்ஸ் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று (21.08.2026) மகாராஷ்டிராவின் புனேவில், இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார். இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள், பிரதிநிதிக்குழுத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பிரிவின் கருப்பொருளான “மீள்திறன் கொண்ட எதிர்காலத்திற்காகப் புதுமை, ஒத்துழைப்பு, மாற்றங்கள்” என்பதை எடுத்துரைத்தார். அதன் நான்கு தூண்களான மீள்திறன் கொண்ட டிஜிட்டல் தொழில்நுட்பச் சூழலமைப்புகள், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் திறன் மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இன்று, உலகம் ஒரு ஆழமான தொழில்நுட்ப மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது என்றார். செயற்கை நுண்ணறிவு, அடுத்த தலைமுறை கட்டமைப்புகள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, கிளவுட் கம்ப்யூட்டிங், மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவை பொருளாதாரங்களையும் சமூகங்களையும் மறுவடிவமைத்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். புத்தாக்கமானது பாதுகாப்பானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, 12-வது பிரிக்ஸ் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தின் முக்கிய முடிவுகள், உலகளாவிய தாக்கம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் எடுத்துரைத்தார் . கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட மாற்றம் மகத்தானது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302144®=3&lang=1
(Release ID: 2302144)
****
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2302198)
आगंतुक पटल : 8