உள்துறை அமைச்சகம்
14-வது இந்திய-நேபாள கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் டேராடூனில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
21 AUG 2026 6:48PM by PIB Chennai
இந்தியா-நேபாள கூட்டுப் பணிக்குழுவின் 14-வது கூட்டம் 2026 ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் டேராடூனில் நடைபெற்றது. இந்தியக் குழுவிற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி பௌசுமி பாசு தலைமை வகித்தார். நேபாளக் குழுவிற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு ஆனந்த கஃப்லே தலைமை வகித்தார்.
இரு தரப்பினரும் எல்லை மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்ததோடு, இதில் பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் மீண்டும் எடுத்துரைத்தனர்.
எல்லைதாண்டிய குற்றங்களைத் தடுத்தல், குற்றச் செயல்களைக் கையாள்வது, ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்தல், எல்லைத் தூண்களைப் பராமரித்தல் ஆகியவை குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு துறைகளில் நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது மற்றும் திறன் மேம்பாடு குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
கூட்டுப் பணிக்குழுவின் அடுத்த கூட்டம், இரு தரப்பினருக்கும் ஏற்புடைய தேதியில் நேபாளத்தில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302085®=3&lang=1
(Release ID: 2302085)
****
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2302186)
आगंतुक पटल : 6