புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
உலக அளவில் நிலவிவரும் நிச்சயமற்றச் சூழலுக்கு இடையே பதிவு செய்யாத துறைகளில் வருடாந்திர வளர்ச்சி வீதம் 9.2 சதவீதத்தை எட்டியுள்ளது
प्रविष्टि तिथि:
21 AUG 2026 4:00PM by PIB Chennai
உலக அளவில் நிலவிவரும் நிச்சமற்ற சூழலுக்கு இடையே பதிவு செய்யாத துறைகளில் வருடாந்திர வளர்ச்சி வீதம் 9.2 சதவீதத்தை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனங்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. மதிப்பிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 8.67 கோடியாக உள்ளது. இது ஆண்டுதோறும் 9.2 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
பதிவு செய்யாத வேளாண் சாராத இதரத் துறைகளில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 13.70 கோடியை எட்டியுள்ளது. இதில், இதரச் சேவைகள் துறை 21 சதவீதத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் நிறுவனங்களின் பதிவு 42.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகமாகும். இது முறைசார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. ரொக்கமில்லாப் பரிவர்த்தணைகள் பெருமளவில் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 80 சதவீத நிறுவனங்கள் ரொக்கமில்லாப் பரிவர்த்தணை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. இத்துறையில் உள்ள மொத்த வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது.
நிதி, நிதி சாராத பல்வேறு குறியீடுகள் தொடர்பான விரிவான வருடாந்திர மதிப்பீடுகளை வெளியிடும் அதேவேளையில் பதிவு செய்யாத வேளாண் சாராத நிறுவனங்களின் வேலைவாய்ப்புத் தொடர்பான காலாண்டு மதிப்பீடுகளை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301953®=3&lang=1
****
SS/SV/GS/SH
(रिलीज़ आईडी: 2302125)
आगंतुक पटल : 6