தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் நலன், மருத்துவக் கல்வியில் உறுதியான பங்களிப்புடன் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு வலுசேர்க்கும் தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகம்
प्रविष्टि तिथि:
20 AUG 2026 4:22PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது எனத் தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 169 மருத்துவமனைகள், 1,603 மருந்தகங்கள், 17 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட விரிவான மருத்துவக் கட்டமைப்பின் மூலம் இஎஸ்ஐ திட்டப் பயனாளிகளுக்குத் தரமான சுகாதாரச் சேவை வழங்கப்படுகிறது.
இஎஸ்ஐசியின் மருத்துவக் கல்லூரிகள் மூலம் இதுவரை 4,961 மருத்துவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,682 பேர் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவர். மருத்துவக் கல்வியில் இஎஸ்ஐசியின் சென்னை கே.கே. நகர் மருத்துவக் கல்லூரியும் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது. இங்கு இளநிலை மருத்துவப் படிப்பில் 933 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 163 பேர் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவர். முதுநிலை மருத்துவப் படிப்பில் 155 மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர்.
இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன் தரமான மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி, எதிர்கால மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதிலும் இஎஸ்ஐசி தொடர்ந்து பங்களித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301544®=3&lang=1
****
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2301730)
आगंतुक पटल : 7