வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்முனைவுச் சூழலை வலுப்படுத்த போன்பே, ஷெல் இந்தியா நிறுவனங்களுடன் டிபிஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

प्रविष्टि तिथि: 20 AUG 2026 5:40PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும், பல்வேறு துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும் போன்பே, ஷெல் இந்தியா நிறுவனங்களுடன் 2026 ஆகஸ்ட் 19 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் புத்தொழில் சூழலமைப்பை வலுவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதன் கீழ் போன்பே நிறுவனம், பணப் பரிவர்த்தனைச் சலுகைகள், இண்டஸ் ஆப்ஸ்டோர் அணுகல், வணிக விரிவாக்க உத்திகள், நிதிசார் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி வகுப்புகளைப் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும்.

எரிசக்தி, பருவநிலைத் தொழில்நுட்பத் துறைகளில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், முதலீட்டாளர் இணைப்பு, திட்ட வாய்ப்புகளைச் ஷெல் இந்தியா நிறுவனம் ஏற்படுத்தவுள்ளது. மேலும் துறைசார் அறிவுப் பகிர்வு, ஆய்வறிக்கைகள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் பங்களிக்கும்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வழிகாட்டுதல், சந்தை வாய்ப்புகள், முதலீடுகளை எளிதாக்கி, நிலையான வளர்ச்சி, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை உறுதிசெய்ய இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301601&reg=3&lang=1

****

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2301686) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu