சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சுற்றுலா பணிக்குழுக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது

प्रविष्टि तिथि: 19 AUG 2026 6:57PM by PIB Chennai

இந்தியாவின் தலைமையில், பிரிக்ஸ் அமைப்பின் சுற்றுலா பணிக்குழுக் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. மத்திய சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 2-வது பிரிக்ஸ் சுற்றுலா பணிக்குழுக் கூட்டம், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திரு புவனேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன் முதல் கூட்டம் 2026 மே 25 அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் செயற்கை நுண்ணறிவு, சுற்றுலா, சுற்றுலா சார்ந்த திறன் மேம்பாடு, சுற்றுலா பரிமாற்றங்கள், தடையற்ற பயண வசதி போன்ற துறை சார்ந்த பல்வேறு அம்சங்களில், உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு, நீடித்த கட்டமைப்பு என்ற மையக் கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த 2-வது பணிக்குழுக் கூட்டம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. தொழில்நுட்ப மாற்றங்கள், பயணிகளின் மாறிவரும் எதிர்பார்ப்புகள், மாறிவரும் உலகளாவிய சுற்றுலாச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நிலையான முன்னேற்றம், மக்கள் தொடர்பு பரிமாற்றங்களின் முக்கிய உந்துசக்தியாகத் திகழும் சுற்றுலாத் துறையை இப்பணிக்குழு அங்கீகரித்தது.

நான்கு கருப்பொருள் அடிப்படையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பொறுப்பான பயன்பாடு, நீடித்த, சமூகம் சார்ந்த சுற்றுலா, மனிதவள மேம்பாடு, சுற்றுலா பரிமாற்றங்கள், வலுப்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு வசதிகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கு இடையேயான மேம்பட்ட ஒத்துழைப்புக்கான அம்சங்களை இது எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.

இந்தப் பணிக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய திரு புவனேஷ் குமார், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஆலோசனைகள், சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். நிலைத்தன்மை, திறன் மேம்பாடு, தடையற்ற பயணம், ஸ்மார்ட் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுலாத் துறை பணிக்குழுக் கூட்டம் முயற்சி மேற்கொண்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பணிக்குழுவின் ஆலோசனை முடிவுகள், ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவுள்ள பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு, ஒரு முக்கிய அடிப்படையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301301&reg=3&lang=1

(Release ID: 2301301)

****

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2301381) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी