தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனேவில் 7-வது பிரிக்ஸ் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பணிக்குழு கூட்டம் தொடக்கம்:டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு குறித்து தீவிர ஆலோசனை

प्रविष्टि तिथि: 18 AUG 2026 7:14PM by PIB Chennai

புனேவில் நடைபெற்றுவரும் 7-வது பிரிக்ஸ்  தகவல், தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பணிக்குழு கூட்டத்தின் இரண்டாவது நாளில் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு, டிஜிட்டல் ஆளுமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

 

டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புக்கான கவனம் செலுத்தும் குழுவின் கூட்டத்தில், இந்தத் கட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்தும், பல்வேறு நாடுகளின் அணுகுமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியா தனது டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு மாதிரியை மற்ற பிரிக்ஸ் நாடுகளுக்குப் பகிர்ந்துகொண்டதுடன், 'பிரிக்ஸ் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு களஞ்சியம்', அதற்கான பரிசோதனைத் திட்டங்கள் குறித்த கருத்து அறிக்கையையும் சமர்ப்பித்தது.

 

டிஜிட்டல் பிரிக்ஸ் பணிக்குழு தனது செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ததுடன், டிஜிட்டல் பயன்பாடுகள், டிஜிட்டல் ஆளுமைக்கான புதிய நிபுணர் குழுக்களின் வரைவு விதிமுறைகள் குறித்தும் விவாதித்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2300968&reg=3&lang=1

 

SS/VK/KR


(रिलीज़ आईडी: 2301061) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi