ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குவாலியர் - சம்பல் இடையே ரயில் போக்குவரத்து இணைப்புக்கான பணிகள் உத்வேகம் பெற்றுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 AUG 2026 5:40PM by PIB Chennai

கயிலாரஸ் – சபல்கர் – பிர்பூர் இடையே அகல ரயில்பாதையாக அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தை மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் ஆகியோர் இணைந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர். மேலும், பிர்பூர் வரையிலான ரயில் சேவையையும் காணொலி வாயிலாக அவர்கள் தொடங்கிவைத்தனர்.

இதன்மூலம் பிர்பூர், விஜய்பூர், சபல்கர் ஆகிய பகுதிகள் குவாலியருடன் நேரடி ரயில் போக்குவரத்துக்கான வசதியை பெறும். இது கிராமப்புற, பழங்குடியின பகுதிகளில் உள்ள பயணிகளுக்கு குறைந்த செலவில் வசதியான ரயில் பயணத்திற்கான வாய்ப்புகளை வழங்க வகை செய்கிறது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக குவாலியர் நகரத்திற்கு செல்ல ஏதுவாக இந்த ரயில் போக்குவரத்து சேவை அமைவதுடன், அப்பகுதிகளில் உள்ளூர் வர்த்த்கம், பொருளாதார நடவடிக்கைகளுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், 56 கிலோமீட்டர் நீளமுள்ள கயிலாராஸ் – பிர்பூர் ரயில் வழித்தடத்தை அகலப் பாதையாக மாற்றும் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது பாராட்டுக்குரிய நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் சாத்தியமாகியுள்ளதாக அவர் கூறினார். மொரேனா மாவட்டத்தில் பார்மோர், ஜவுரா, கயிலாரஸ், சபல்கர் ஆகிய பகுதிகளும் ஷியோபூர் மாவட்டத்தின் பிர்பூர், ஷியோபூர், கரகால் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களும் இதன் மூலம் பயனடையும் என்று திரு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300907&reg=3&lang=1

 

***

SS/SV/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2301055) வருகையாளர் எண்ணிக்கை : 49
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Kannada