வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கழிவுகளிலிருந்து காடுகள்: கர்நாடகாவின் ராய்ச்சூர் நகரில் மியாவாகி முறையில் 22 ஏக்கர் நிலம் மீட்பு

प्रविष्टि तिथि: 18 AUG 2026 2:40PM by PIB Chennai

தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் அமைந்துள்ள 35 ஏக்கர் யாகலாஸ்புரா குப்பை கிடங்கு அறிவியல் பூர்வமாக மீட்கப்பட்டு பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 62,252 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு ஏறத்தாழ 22 ஏக்கர் நகர்ப்புற நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தில் மியாவாகி காடுகள் வளர்க்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நச்சுக்கழிவுகளைச் சுற்றுச்சூழல் வளமாக மாற்றும் இத்திட்டத்தின் கீழ் அப்பகுதியில் மூங்கில் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு ரக மரக்கன்றுகள் நடப்பட்டு மண் வளம் மேம்படுத்தப்படுவதுடன், காற்றின் தரமும் உயர்ந்துள்ளது.

நகர்ப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் இந்த முன்னெடுப்பு, நாட்டின் பிற நகரங்களுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இத்திட்டம் திறமையான நகர்ப்புற நிர்வாகத்தின் தாக்கத்தையும் தூய்மைக்கான தொடர் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300806&reg=3&lang=1  

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2300967) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada