பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கடற்படைக்காக இரண்டு நவீன விமானங்களைக் குத்தகை எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

प्रविष्टि तिथि: 17 AUG 2026 2:20PM by PIB Chennai

இந்தியக் கடற்படைக்காக அதிக உயரத்தில் இருந்தும் நீண்டதூரம் பறக்கக்கூடிய தொலைவிலிருந்து இயக்கப்படும் இரண்டு விமானங்களை 30 மாத காலத்திற்குக் குத்தகை எடுப்பதற்கு ஜெனரல் ஆட்டோமிக்ஸ் ஏரோனாட்டிகல் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ 1,943 கோடியாகும்.

புதுதில்லியில் 2026 ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளரும், தலைமை இயக்குநருமான (கொள்முதல்) திரு ஏ அன்பரசு முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேம்பட்ட முறைகள், அதிநவீன சென்சார்கள், கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த எம்.கியூ-9பி விமானங்கள் இந்தியக் கடற்படையின் கடல்சார் திறனை பெருமளவில் மேம்படுத்தும். இந்த அமைப்புகள் தொடர்ச்சியான உளவு நடவடிக்கை, கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும். இதன்மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதியைக் கண்காணிக்க இந்தியாவின் திறன் வலுப்பெறும்.

***

Release ID: 2300388

SS/IR/LD/SH


(रिलीज़ आईडी: 2300588) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu