பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அனுபவ விருதுகளை புதுதில்லியில் நாளை வழங்குகிறார் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 16 AUG 2026 5:35PM by PIB Chennai

மத்திய பணியாளர் நலன் ஓய்வூதியங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 9-வது தேசிய அனுபவ விருது வழங்கும் விழாவையும், 60-வது ஓய்வுக்கு முந்தைய கலந்தாய்வுப் பயிலரங்கையும் நாளை (2026 ஆகஸ்ட் 17) புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிகள், மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் தலைமையில் நடைபெறும்.

'அனுபவ்' தளம், மத்திய அரசு ஊழியர்கள், 12 பொதுத்துறை வங்கிகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

2026-ம் ஆண்டுக்கான தேசிய அனுபவ விருதுகள் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 விருது பெற்றவர்கள், மத்திய அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்களின் செயலாக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.

9-வது தேசிய அனுபவ விருது வழங்கும் விழாவில், டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான தேசிய அனுபவ விருதுகளை வழங்குகிறார்.

ஓய்வூதியப் பலன்களை உரிய நேரத்தில் பெறுவதற்குத் தேவையான செயல்முறைகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்காக, முக்கியமாக, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்காக, 60-வது ஓய்வுக்கு முந்தைய கலந்தாய்வுப் பயிலரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300195&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300223) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati