மருந்துகள் துறை
இந்திய மருந்து நிறுவனங்கள் உலகின் முதல் ஐந்து இடங்களுக்குள் தடம் பதிக்க வேண்டும் - பிரதமர் திரு நரேந்திர மோடி
प्रविष्टि तिथि:
15 AUG 2026 10:36PM by PIB Chennai
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையின் கொத்தளத்திருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மருந்துத் துறையில் குறிப்பிடத்தக்க பணிகளை எடுத்துரைத்ததுடன், மேலும் உலகளாவிய இலக்குகளை அடைய அழைப்பு விடுத்தார். மருந்துத் துறையில் இந்தியா பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது என்று அவர் கூறினார். இருப்பினும், உலகின் முதல் ஐந்து மருந்து நிறுவனங்களில் ஒன்று அல்லது இரண்டு இந்திய மருந்து நிறுவனங்கள் தடம் பதிப்பதே தற்போதைய தேவையாகும் என்று அவர் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பிராண்டுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்திய ஆலோசனை, கணக்கியல் நிறுவனங்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ வேண்டும் என்றும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலக அளவில் முன்னணியில் உருவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்திய பிராண்டுகளை நாட்டின் வலுவான அடையாளமாகவும் , உலகமே விரும்புவதாகவும் மாற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300074®=3&lang=1
****
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2300208)
आगंतुक पटल : 6