குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பார்சி புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 14 AUG 2026 6:10PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பார்சி புத்தாண்டையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: -

 

"பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் எனும் மங்களகரமான நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து சக குடிமக்களுக்கும், குறிப்பாக பார்சி சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நவ்ரோஸ் புதிய தொடக்கங்களையும் புதிய நம்பிக்கையையும் குறிக்கிறது. மகிழ்ச்சி, நல்லிணக்கத்தின் இந்தத் திருவிழா, சகவாழ்வு, மனிதகுலத்திற்குச் சேவை செய்தல் ஆகிய விழுமியங்களை நமக்கு நினைவூட்டுகிறது. பார்சி சமூகம், தங்களின் தொழில் முனைவு, கொடை மனப்பான்மையின் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளது.

 

இந்தப் புனிதமான திருவிழா, அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து செயல்படத் தூண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தத் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பைக் கொண்டுவரட்டும்."

 

(Release ID : 2299504)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2299692) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Malayalam